தமிழக சிற்றரசர்கள்-04
முத்தரையர்:
முத்தரையர் மரபு பற்றி இதுவரை வெளிவந்த அறிஞர்களின் கூற்று:
1.களப்பிரர் வழிவந்தவர்
2.புல்லி மரபினர்
3.வேளிரான கங்கர் வழிவந்தவர்
இதுவரை முத்தரையர் குறித்த பொதுவான புரிதல் இது.
இம்மூன்று வாதங்களையும் அலசுவோம்
1.களப்பிரர் வழிவந்தவர்:
அடுதிறல் ஒருவ நிற்பரவதும் எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
கயலோடு கிடந்த சிலையுடைக் கொடுவரி
புயலுலற் தடக்கை போர்வேல் அச்சுதன்
இப்பாடல் "வியைவினிச்சயம்" எனும் நூலில் ஆசாரிய புத்ததத்தேதர் எனும் அறிஞரால் கி.பி 5 ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதில் மூவேந்தரின் சின்னங்களை அச்சுதன் எனும் களப்பிரன் தன் கொடியில் கொண்டிருந்தான் எனப்பாடுகிறார். (கயல்(மீன்),சிலை(வில்),கொடுவரி(புலி))
இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் எனும் முத்தரைகளை ஆண்டதனால், இவர்கள் பிற்காலத்தில் "முத்தரையர்" என அழைக்கப்பட்டனர். செந்தலை தூண்கல்வெட்டில் "ஸ்ரீ கள்வர் கள்வன்" என வருகிறது! இதனை களவர களவன் என்று கொள்ளலாம் அதாவது களப்பிரர் என கொள்ளலாம் எனும்
இக்கருத்தினை மயிலை.சீனி வேங்கடசாமியும் மேலும் சில அறிஞர்களும் கருதினர். ஆனால் நடன.காசிநாதன் முதலியோர் இக்கருத்தினை மறுக்கின்றனர். களப்பிரர் தம் கல்வெட்டில் தம்மை முத்தரையர் என எங்கும் அழைக்கவில்லை. அதேபோல பாண்டியர் செப்பேட்டில் "கலிஅரசன்" என களப்பிரரை அழைக்கின்றனர்.ஆனால் குன்றாண்டார் கோவில் கல்வெட்டில் முத்தரையர் ஒருவர் தம்மை "கலிமூர்க்கன்" களப்பிரரை எதிர்த்தவன் எனும பொருளில் அழைத்துக்கொள்கிறான். இக்காரணங்களால் முத்தரையர் களப்பிரர் குடிஅல்ல என்கிறார்.
2.புல்லி மரபினர்:
புல்லியார் வம்ச நடுகல்:
"கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"
அகநானூற்று பாடலான இப்பாடலில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும், வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான்(அரசன்) என பொருள் கொள்ளலாம்.
புல்லியின் வாழ்க்கைமுறை:
"அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்"
தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை,கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, தன்னை புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான்.கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.
இதுதவிர புல்லியியின் இனத்தை பற்றி 10 பாடல்கள் சங்கஇலக்கியமெங்கும் கிடைக்கிறது. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக்கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில் கூடகண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில் வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக்கூட்டங்களை கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது என காட்டியிருப்பார். தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் "கரந்தைபோரில்" மட்டுமே ஈடுபட்ட இவ்வினம். நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்ப்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்ககாலத்தில் எவ்வரசக்கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலை கொண்டிருந்த இவ்வினம், கிட்டத்தட்ட சங்ககாலம் தொடங்கி ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அவ்வாறே தனித்தவொரு குடியினராய் திகழ்ந்ததற்கு கீழ்க்கண்ட புல்லிநடுகல்லே சான்று. இந்த கள்வர் குலத்திலிருந்து கிளைத்த குடியாய் முத்தரையர் இனம் உருமாற்றமடைந்திருக்கூடும் என்ற ஐயத்தினை செந்தலை, மற்றும் கிள்ளுக்கோட்டை நடுகல் உணர்த்துகிறது. இரண்டாம்நந்திவர்மன் காலத்திலேதான் முத்தரையர் கல்வெட்டு அரசமரபினராய் தஞ்சைபகுதியில் கிடைக்கிறது. அதற்குமுன் தொண்டைமண்டல பகுதி நடுகல்லில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது. இரண்டாம் நந்திவர்மனின் கடிநகரம் இன்றைய கண்டியூரைசுற்றியுள்ள பகுதிகள். இப்பகுதியில் அவருக்கு ஆதரவான ஒரு குடி முத்தரையர் மட்டுமே! பன்னிரன்டு வயதில் அரியனையேறிய நந்திவர்மன் தாயாதி பிரச்சனையில் கடிநகரம் தோற்றுவித்து அங்கேகுடியேற, அவருக்கு ஆதரவாய் தொண்டைமண்டலத்திலிருந்து தஞ்சைப்பகுதிக்கு முத்தரையர் குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். சித்திரமாய பல்லவராஜனும், பாண்டியனும் நந்திவர்மனை சிறைபடுத்த, திருத்தணியிலிருந்து பெரும்டையொடு உதயேந்திரன் வந்து அவர்களை வென்று நந்திவர்மனை மீட்டான். அப்போரில் முத்தரையரின் பங்கு பெரியதாய் இருந்திருக்கும். இப்போருக்கு பிறகே குவாவன் முத்தரையன் எனும் முத்தரைய மன்னனின் முதல் கல்வெட்டு பொன்விளைந்தபட்டி அருகே கிடைக்கிறது. இதன்பிறகே முத்தரையர் மரபு அரச உருவாக்கம் பெற்றிருக்கும் என தோன்றுகிறது. அதன்பின் நிருபதுங்கன் காலம் வரை பல்லவருக்கு கீழிருந்து சிறப்பாய் ஆட்சிபுரிந்தனர். இவர்களில் சிறந்த மன்னனாய் கருதப்படும் சுவரன்மாறன் தன் கல்வெட்டுகளில் "கள்வர் கள்வன்" என கூறிக்கொள்கிறான். எனவே சங்ககாலத்தில் தன்னை "கள்வர் கோமான்" என கூறிக்கொள்ளும் புல்லி மரபு இவர்களாய் இருக்கக்கூடும் என நடனகாசிநாதன் முதலானோர் கூறுகின்றனர்.
கீழே கானும் நடுகல் கல்வெட்டு, ஆநிரைகவரும் குடியாய் இருந்த புல்லிகள் அதன்பின் காவல்காக்கும் குடியாய் மாறி நிரைமீட்டு இறந்த வெட்சிபோர் வீரனை பற்றி கூறுகிறது.
"புல்லியார் கொற்றாடை நிரை
மீட்டுப்பட்ட கல் கோனாரு"
என்பது மேற்கண்ட கல்வெட்டு வாசகம்
3.கங்கர் வழிவந்தவர்:
முத்தரசர் என்ற சொல்லினை முதன்முதலாக பெங்களூர், கோலார்,தலைக்காடு பகுதிகளில் ஆண்ட கங்கர்களின் செப்பேட்டிலே காண்கிறோம். இவர்கள் கொங்கனி கங்கர் என அழைக்கபடுகின்றனர்.
பொயு 550-600 ன் இடைப்பகுதியில் ஆண்ட துர்விநீதன் என்பவர், முதல்பகுதியை சமஸ்கிருதத்திலும் மறுபகுதியை பழைய கன்னடத்திலும் (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழிலேதான் இருக்கும்) கொண்ட இருமொழிச் செப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செப்பேட்டின் சமஸ்கிருத பகுதியில் அவர் தன்னை "ஸ்ரீமத் கொங்கனி விருத்தராஜேன துர்விநீத நாமதேயன்" எனவும், அதே பகுதியை பழைய கன்னடத்தில் "ஸ்ரீ கொங்கனி முத்தரசரு" எனவும் குறிப்பிடுகிறார். பொயு 7ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம்சிவமாறன் என்ற கங்க மன்னனும் இவ்வாறே முத்தரசர் என்று தன்னை அழைக்கிறார்.
சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் வேளிர்களில் கங்கரும் உள்ளனர். அகநானூறில் உள்ள ஒரு பாடலில் "நன்னன் ஏற்றை நறும்பூண் அந்தி துன்னரும் கடுந்திறள் கங்கர் கட்டி"(அகம்.44 ) என சிறப்பித்துக் குறிப்பிடபடுகின்றனர். இதில் குறிப்பிடப்படும் நன்னன் என்ற கங்கர், சோழன் ஒருவரோடு போரிட்டு தோற்றுள்ளார், சங்ககால கங்கர் கொங்கானத்தை ஆண்டு படிப்படியாக பெங்களூர், கோலார் வரை அரசை நிறுவினர். இந்த தரவுகளை வைத்து கங்கரே முத்தரையர் என குடவாயில் பாலசுப்ரமணியம் முதலானோர் கருதுகின்றனர்.
முத்தரையர் வம்சாவளியினராக,
1.பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறன்
2.அவர் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேஸ்வரன்
3.அவர் மகன் பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன்
என மூன்று தலைமுறை முத்தரைய மன்னர்களைச் செந்தலை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
முத்தரையர்களின் அரசானது பல்லவர் காலத்தில் துவங்கி பின் பாண்டியர் மற்றும் பல்லவர்களின் ஆதரவில் வளர்ந்து பிற்காலசோழ பேரரசின் தலையெடுப்பில் முடிவுற்றது. இவர்களின் அரசானது தஞ்சை மேற்குபகுதியிலிருந்து திருச்சிராப்பள்ளி வரையிலும், காவிரி வடகரையிலிருந்து புதுக்கோட்டையின் ஒரு பகுதி வரையிலும் நீண்டிருந்தது. முத்தரையரின் கல்வெட்டுகள் நேரடியாக செந்தலை, திருசென்னம்பூண்டி, திருசோற்றுத்துறை, மலையடிப்பட்டி நார்த்தாமலையிலும், பின்னர் அவர்கள் வேளிர்களுடன் கொண்ட திருமணமுறை குறித்து குடுமியான்மலை போன்ற சில இடங்களிலும், அதிகாரிகள், படைவீரர்கள் போன்ற நிலையை எய்தியமைக்கு சான்றாக சோழதேசத்தில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
தகவல்கள்:
1.Epigraphia indica vol 13(page 142)
2.Pudukottai state inscriptions
3.குடவாயில் பாலசுப்ரமணியம் (நந்திபுரம்,தஞ்சாவூர்)
மேற்க்கண்ட மூன்று கருத்துகளும் இன்றுவரை விவாதத்திற்குள்ளாகவே உள்ளது. இதில் மேலுள்ள களப்பிரர் முத்தரையரே எனும் கருத்து சரியானதாய் இருக்க வாய்ப்பு குறைவு.
சங்கம் மருவிய காலம் என சொல்லப்படும் அதாவது கி.பி 3 ற்கு பின் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூலான நாலடியாரில் முத்தரையர் பற்றி முதன்முதலாய் ஒரு பாடல் வருகிறது.
"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்"
நடுகற்களில் முத்தரைசர்:
வானகோமுத்தரைசர்:
செங்கம் மேற்கோவலூரில் வானகோமுத்தரைசர் எனும் நரசிம்மவர்ம பல்லவன்(கி.பி-630-669)கால நடுகல் கிடைத்துள்ளது. கல்வெட்டில் நேரடியாய் கிடைக்கும் முதல் முத்தரையர் நடுகல் இது.
பெரும்பாண முத்தரைசர்:
தருமபுரி பாலவாடி, பெரும்பாண முத்தரைசர் எனும் குறுநிலத்தலைவனின் நடுகல் கிடைத்துள்ளது. "பெரும்" எனும் அடைமொழி நாலடியார் பாடலில் முத்தரையர் குறித்து கூறுகையில் பயின்று வருகிறது. அதேபெயர் இங்கேயும் வருவது நோக்கத்தக்கது. இவர் ஸ்ரீபுருஷவர்மன் எனும்கங்க மன்னனிற்கு அடங்கி கங்கநாட்டின் சில பகுதிகளை ஆண்டது தெரிகிறது.
காடகமுத்தரையன்:
இந்த முத்தரையன் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் வருகிறான். சிறுவனான இரண்டாம் நந்திவவர்மன் சிறுவனாய் அரியனை ஏற்கிறான். அங்கு ஏற்கனவே இருந்த பல்லவாதிராஜன், இவனை எதிர்க்க அச்சமயம் இந்த காடகமுத்தரையனே பல்லவனுக்கு காவலனாய் நின்று மீண்டும் காஞ்சியை அவனுக்கு தலைநகராய்
மாற உதவிபுரிகிறான். இதற்கடுத்து குவாவன் என்பவரது பெயர் கிடைக்கிறது.
8-10 ம் நூற்றாண்டு முத்தரையர்:
தஞ்சை மாவட்டம் பொன்விளைந்தப்பட்டி குளத்தில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. இது இரண்டாம் நந்திவர்மன் கால கல்வெட்டாகும். இதில் குவாவனது மனைவி பள்ளிச்சந்தமாய் நிலதானம் அளிக்கிறார். இவருக்கு இரு மகன்கள்
1.குவாவன் மாறன் 2.குவாவன் சாத்தன்
குவாவன் மாறன் தஞ்சை பகுதியிலும் குவாவன் சாத்தன் புதுக்கோட்டை பகுதியிலும் சமகாலத்தில் ஆள்கின்றனர்.
குவாவன்மாறன் மரபு:
இவனது மகன் மாறன் பரமேஸ்வரன் இவனது கல்வெட்டு கிடைக்காவிடினும், செந்தலை கல்வெட்டில் தன் முன்னோராக சுவரன்மாறன் கூறுகிறான். இவரது மகனே பெரும்புகழ் பெற்ற சுவரன்மாறன். இவன் மூன்றாம் நந்திவர்மனின் சமகாலத்தவன்,
ஆயிரத்தளி என குறிப்பிடப்படும் 'நந்திபுரம்', நியமம் என ஊரில் மட்டுமே இவ்வகை சிலைகள் உள்ளது. அன்றைய நந்திபுரம் இன்றைய கண்டியூர் வீரசிங்கம்பேட்டை மற்றும் அருகேயுள்ள ஊர்களால் ஒருங்கிணைந்த பெருநகரமாய் அன்று இருந்துள்ளது. இதனை குடவாயிலார் நந்திபுரம் என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.நியமம் கல்லனை -திருக்காட்டுப்பள்ளி இடையே சிற்றூராய் உள்ளது.
ஆயிரத்தளி வாகீசர்:
'ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி' என சிறப்பித்து கூறப்படும், நந்திவர்மபல்லவனால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரிலும், அவர்களின் சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் இவ்வகை வழிபாடு இருந்துள்ளது.ஆயிரம் லிங்கங்களை நிர்மாணித்து வணங்கும் வழக்கம் இவ்விரு ஊர்களில் இருந்துள்ளது. இன்றும் அவ்வூர்களை சுற்றி ஆங்காங்கு நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன.
இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும்.இறைவன் தாமரைபீடத்தில் சுகாசனகோலத்தில் அமர்ந்திருப்பார்.நான்கு தலைகளுடன் நாற்கரங்களுடன் கம்பீர கோலத்திலிருப்பார்.நான்கு முகங்களிலும் நெற்றிக்கண் இருக்கும்.
மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை 'தாமரைச்சைவனாக' காட்டுகிறார்.தேவாரம், திருவாசகத்திலும், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகமநூல்களிலும் வாகிசர் குறிக்கப்படுகிறார்.
இவ்வறிய சிற்பம் இன்று பிரம்மனாக கண்டியூரிலும், செந்தலையிலும் வணங்கப்படுகிறார்.
சுவரன்மாறன் வெற்றிகள்:
பெரும்பிடுகு முத்தரையன் எனும் சுவரன் மாறன் அவர்தம் பகைவர்களை மணலூர், கொடும்பாளூர், காரை, காந்தளூர், கண்ணணூர், செம்பொன்மாரி, மறங்கூர், அண்ணல்வாயில், அழிந்தியூர் ஆகிய ஊரில் வென்றதாய் புலவர்கள் பாடியுள்ளனர். செந்லையில் இக்கல்வெட்டு உள்ளது.
இதில் நிறைய இடங்கள் புதுக்கோட்டை சுற்றியே உள்ளன.
பதிமூன்று பட்டங்களை இவன் சூடிக்கொள்கிறான்.இப்பட்டங்கள் இவனது நடுகல்லிலும் வருகிறது.
கிள்ளுக்கோட்டை நடுகல்:
கிள்ளுக்கோட்டையிலுள்ள ஓர் தனியார் வயலில் உள்ளது.
அதிலுள்ள கல்வெட்டு வாசகம்:
1.ஸ்ரீ ஸத்ரு கேசரி
2.ஸ்ரீஅபிமான தீரன்
3.ஸ்ரீ கள்வர் கள்வன் வாள்வரிவேங்கை கு...தி
சுவரன் மாறனின் முக்கிய பட்டங்கள் இதிலுள்ளது அதற்கடுத்து கடைசியாய் வாள்வரிவேங்கை கு...தி என்பதை குத்தியது என பொருள் கொள்ளலாம்.
இம்மாபெரும் வீரன் வாள்வரிவேங்கை எனும் வீரரால் கொல்லப்பட்டார் என கொள்ளலாம். இறந்த இடத்தில் நடுகல் எழுப்பும் வழக்கம் அன்று இருந்ததால் இவ்விடத்தில் நிகழ்ந்த ஓர் போரில் இறந்திருக்கலாம்.
இதன் கீழே ஓரு புலி உருவம் இருந்து பின்னர் சிதைக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து ஆண்ட சுவரன்மாறனின் வழியினர் விவரம் இல்லை. இம்மரபினரிடமிருந்தே விஜயாலயசோழன் தஞ்சையை கைப்பற்றியிருக்கிறார். அல்லது இவனுக்குபின் சாத்தன்மாறன் மரபு தஞ்சையும், புதுக்கோட்டையும் சேர்ந்து ஆண்டிருக்கக்கூடும்.
குவாவன்சாத்தன்:
குவாவன் சாத்தனுக்கு விடேல்விடுகு எனும் பெயர் உண்டு. இவன் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டியில் குடைவரையை ஏற்படுத்தினான். இவனது மகன் சாத்தம்பூதி இவனே நார்த்தாமலையில் புகழ்பெற்ற விஜயாலயசோழீஸ்வரம் கோவிலை எழுப்பியவன். மழையால் இடிந்த இக்கோவிலை தென்னவன் தமிழதரையன் புதுப்பிக்கிறான்.
சாத்தம்பூதிக்கு பூதிஅரிந்திகை எனும் மகள் உண்டு. குவாவன் சாத்தனின் மற்றொரு மகன் சாத்தம்பழியிலி இவனும் நார்த்தாமலையில் ஓர் குடைவரை கோவிலை எழுப்பி தன்பெயரிலேயே அழைக்கிறான். இவனின் தங்கை பழியிலி சிறியநங்கை. இவளின் தங்கை சாத்தங்காளி.
பூதிகளரி எனும் முத்தரையன் புதுக்கோட்டை பூவாலக்குடியில் ஓர் குடைவரை எழுப்புகிறான். இவன் சாத்தம்பூதி எனும் ஓர் கருத்துண்டு.
இவ்வாறு சிற்றரசர்களாய் இருந்த முத்தரையர் மரபு, பராந்தகர் காலத்தில் இருக்குவேளிருடன் மணமுடிக்கும் நிலையில் இருந்து படிப்படியாய் உயர்அதிகாரி, தளபதி எனும் நிலைமை எய்கிறது. இறுதியாய் காவல்காரனாய் சில செப்பேடுகள் கிடைத்து மக்களோடு மக்களாய் கலந்து விடுகின்றனர்
முத்தரைசர் நடுகல்
குவாவன் கல்வெட்டு
Super
ReplyDeleteகட்டுரை ஆசிரியருக்கு வணக்கம்.. சான்றுகள் குறிக்கும் பொழுது அதை கட்டுரையின் இறுதியில் இணைத்தால் நன்றாய் இருக்கும் (References).. முத்தரையர் குறித்த ஆய்வில் உள்ள எம் போன்றோருக்கு அவை உதவியாகவும் இருக்கும்.. 😊 நன்றி !
ReplyDeleteநடன காசிநாதன் அவர்களின் முத்தரையர் குறித்த நூல்கள் எங்குமே கிடைக்கவில்லை.. எங்கேனும் கிடைப்பின் தெரியப்படுத்துங்கள் 🙏🙏 தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 📖📚✍🏻
களப்பிரர் (தமிழக அரசு வெளியீடு)
ReplyDeleteநாகரும் களப்பிரரும்
ReplyDelete_________________________________________
நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.
நாகர்களுக்கு எதிராக போர்
ReplyDelete__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் - மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகரும் களப்பிரரும்
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.
1. வருணகுலத்தோர் (நாகமீனவர்கள்)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)
மறவர்
மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.
இலங்கை
குஹன்குலத்தோர்
இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.
மறவர்களின் வன்னியர் பதவி
கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.
முக்குவர்(முற்குகர்)
மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.
வெள்ளாளர்
கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.
பரதவர்
பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாட்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டில் பார்த்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.
பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.
நாகரும் களப்பிரரும்
ReplyDeleteவில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்
சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.
வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
களப்பிரர்
வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர்.
கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.
வேளிர் வேளாளர்
கரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.
புல்லி
காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.
முடிராஜா
ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.
பல்லவர்
வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.
முத்தரையர்
மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.
நாகரும் களப்பிரரும்
ReplyDeleteகளப்பிரர்
கி.பி 300 முதல் கிபி 800 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
களப்பிரர் தோல்வி
கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.
பிற்கால சோழர்
பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.
நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு
இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.
பாணர்
ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கொங்கு வேளாளர்
கொங்கு வேளாளர் மூன்றாம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும்.
கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட, பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது. உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் காலிங்கராயர் மற்றும் வாணவராயர் என அறியப்பட்டனர்.
சோழ பாண்டியர்களுக்கு வாணாதிராயர்களிகன் துரோகம்
வானதிராயர்கள் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக பாண ராஜ்ஜியத்தின் சொந்த உறவினர்களான பலிஜா நாய்க்கரை ஆதரிக்கத் தொடங்கினர்.